Skip to main content

ஐபில் போட்டியில் காலணி வீசி எதிர்த்த 8 பேர் ஜாமீனில் விடுவிப்பு

Published on 20/04/2018 | Edited on 20/04/2018
naam

 

காவிரி மேலாண்மை வாரியம் அமையும்வரை ஐபில் போட்டிகள் புறக்கணிப்பு என்று காலணி வீசி எதிர்ப்பு தெரிவித்து சிறைசென்ற 8 பேர் ஜாமீனில் விடுதலை.

 

கடந்த 10-04-2018 அன்று சென்னை, சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபில் போட்டியின் போது பார்வையாளராக சென்று விளையாட்டுத் திடலினுள் காலணிகள் வீசியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஐபில் போட்டிகளைப் புறக்கணிக்குமாறு முழக்கங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்ததற்காக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

இதில் 8 பேருக்கு நேற்று (19-04-2018) ஜாமீன் கிடைத்துள்ளது.

1. பிரபாகரன் காமராஜ் 
2. பொன்னுவேல் 
3. மகேந்திரன் 
4. ராஜ்குமார் 
5. சுகுமார் 
6. ஆல்பர்ட் 
7. ஏகாம்பரம் 
8. மார்டின்

மேலும் ஐபில் போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்ட (14-04-2018) ஸ்டாலினுக்கும் நேற்று (19-04-2018) ஜாமீன் கிடைத்துள்ளது. எஞ்சியவர்களைப் ஜாமீனில் ல் எடுக்க "நாம் தமிழர் - வழக்கறிஞர் பாசறை" அயராது பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. விரைவில் அனைவரையும் மீட்போம்.

ஜாமீன் கிடைத்துள்ள 9 பேரும் இன்று (20-04-2018) மாலை 04:30 மணியளவில் விடுதலையானார்கள்.

சார்ந்த செய்திகள்