தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதல்வர் எடப்பாடி. பழனிசாமி நேரில் சென்று அரசு துறைகளின் ஆய்வுக்கூட்டமும், கரோனா நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்துகிறார். அதன்படி திருவள்ளுவர் மாவட்டத்துக்கு செப்டம்பர் 3ந் தேதியும், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்துக்கு செப்டம்பர் 5ந் தேதியும் வருகை தருவதாக இருந்தது.
இந்நிலையில் ஆகஸ்ட் 31ந் தேதி இரவு இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மருத்துவமனையில் மரணமடைந்ததை தொடர்ந்து, திருவள்ளுர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்துக்கு முதல்வர் வருகை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்துக்கு செப்டம்பர் 9ந்தேதி முதல்வர் வருகை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் வருகை தேதி மாற்றப்பட்டதால் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் செய்யப்பட்ட அனைத்து பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.