Published on 08/08/2019 | Edited on 08/08/2019
தமிழகத்தில் முதல்முறையாக போக்குவரத்து விதிமீறல்களுக்கு இ-சலானில் பணம் செலுத்தும் முறை கடலூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
"இனி போக்குவரத்து காவலர்கள் எக்காரணத்தைக் கொண்டும் பணத்தை கையில் வசூலிக்கக்கூடாது. ஸ்வைப் மிஷின் மூலமாகவோ அல்லது வங்கிகள் மூலமாகவோ, தபால் நிலையங்கள் மூலமாகவோ மட்டுமே அபராத தொகையை செலுத்த வேண்டும்" என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டுள்ளார்.