ஐஏஎஸ் பணி நியமன விதிகளில் தற்போது மத்திய அரசு புதிய திருத்தம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி, மாநிலங்களில் பணிபுரியும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை எப்போது வேண்டுமானாலும் மத்திய அரசின் பணிக்கு அழைத்துக் கொள்ளலாம் என்ற புதிய விதியினை இணைக்க தற்போது மோடி தலைமையிலான மத்திய அரசு முயன்று வருகிறது. இந்த புதிய விதிக்கு தமிழகத்தில் திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இதுதொடர்பாக திருமாவளவன் நேற்று நீண்ட அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், " ஆட்சி பணி விதிகளில் திருத்தம் கொண்டு வரும் என்ற முடிவினை மத்திய அரசு கண்டிப்பாக கைவிட வேண்டும். மாநில அரசின் நிர்வாக நடவடிக்கைகளில் இது தடங்களை ஏற்படுத்தும்" எனக் அக்கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த திருத்தத்துக்கு மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.