Skip to main content

போர்வெல் மூலம் 20 அடிக்கு துளை... 69 மணிநேரத்தை தாண்டி மீட்புப்பணி!  

Published on 28/10/2019 | Edited on 28/10/2019

ரிக் இயந்திரம் மூலமாக துளையிடும் பணி நிறுத்தப்பட்டு போர்வெல் மூலம் துளையிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது 20 அடி ஆழத்திற்கு போர்வெல் இயந்திரத்தை கொண்டு நான்கு துளைகள் இடப்பட்டுள்ளது. மொத்தம் 6 துளைகள் இட்ட பிறகு மீண்டும் ரிக்  இயந்திரத்தை பயன்படுத்தி போர்வெல் மூலம் போடப்பட்ட இந்த 6 துளைகள் ஒரு மீட்டர் அகலமுடைய, தீயணைப்பு வீரர்கள் இறங்குவதற்கு ஏதுவான அகலமுடைய குழியாக மாற்றப்படும்.

 

hhh

 

போர்வெல் மூலம் தோண்டப்பட்ட 4  குழிகளில் ஒரு குழியில் மண் போன்ற துகள்கள் கிடைத்ததால் 20 அடிக்கும் கீழ் பாறைகள் அல்லாத மண் இருக்க வாய்ப்புண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது மீட்பு பணியை சாதகப்படுத்தியுள்ளதால் மீட்புப்பணி கைவிடாது தொடர்ந்து முயற்சிக்கப்படும் என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதேபோல் ஏற்கனவே சுஜித்தை மீட்க முயற்சித்த புதுக்கோட்டையை சேர்ந்த வீரமணியை தலைமையிலான குழு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏழு பேர் கொண்ட அந்த குழுவில் தற்போது மீண்டும் நடுக்காட்டுபட்டிக்கு வரயிருக்கிறது.
 

மணப்பாறை பகுதியில் உள்ள பாறை இருநூற்று நாற்பது வருடங்களுக்கு பழமையான பாறை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தின் மென்பாறை கடின பாறை என இருவகையுண்டு, மணப்பாறை பகுதியில் கடினப் பாறை பகுதியாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்