Published on 24/05/2019 | Edited on 24/05/2019
நேற்றய தினம் வாக்கு எண்ணிக்கைகள் நடைபெற்று நாடு முழுவதும் பாஜக கூட்டணி 340 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையை பெற்றுள்ளனர்.தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களை பிடித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.இதில் திமுக மட்டும் 20 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து இடங்களையும் கைப்பற்றியது.மேலும் திமுக சின்னத்தில் கூட்டணி கட்சியினர் 3 பேர் போட்டியிட்டு அவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.இதனால் தமிழகத்தில் திமுக 23 இடங்களை கைப்பற்றியுள்ளது.தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றியது குறிப்படத்தக்கது.இந்த நிலையில் பாஜக,காங்கிரஸ் கட்சிக்கு அடுத்து திமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.