Skip to main content

தி.மு.க செயற்குழு உறுப்பினருக்கு அரிவாள் வெட்டு... மருத்துவமனையின் முன் குவிந்த தொண்டர்கள்

Published on 13/10/2020 | Edited on 13/10/2020

 

தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினராக இருப்பவர் கே.கே நகர் தனசேகரன். இன்று அவர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண் ஊழியரான அமுதாவை ஒரு நபர் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அதை தனசேகரன் தடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தனசேகரன் மீது அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

அரிவாளால் வெட்டில் பலத்த காயமடைந்த தனசேகரன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார். பெண் ஊழியரான அமுதாவிற்கும் கையில் வெட்டு காயம் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அமுதாவின் கணவர் தான் இந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அமுதாவிற்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமுதாவை அரிவாளால் வெட்டுவதற்காக அவரது கணவர் அலுவலகத்திற்கு வந்த நிலையில், தடுத்த தி.மு.க பிரமுகர் தனசேகரன் மேலும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தி.மு.க பிரமுகர் தனசேகரன் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை முன்பு அக்கட்சியின் தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“தமிழக போலீசார் சரியாகச் செயல்படவில்லை” - சசிகலா பேச்சு!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Tamil police are not working properly" - Sasikala speech

தமிழக போலீசார் சரியாகச் செயல்படவில்லை எனச் சசிகலா பேட்டியளித்துள்ளார்.

சென்னையில் சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி 90 சதவிதம் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 10 நாட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். தற்போது அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். தமிழக போலீசார் சரியாக செயல்படவில்லை.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி நடத்திய போது அவர் ஒரு பெண் முதல்வர் என்பதால் அரசியல் கட்சியினர் பலரும் அவரை விமர்சனம் செய்தனர். தற்போது ஜெயலலிதா புகைப்படம் பலருக்கும் தேவைப்படுகிறது. அதற்கு அவர் ஆற்றிய பணிகளே காரணம்” எனத் தெரிவித்தார். 

Next Story

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Nellai Mayor Saravanan resigns

கோவை மேயராக பதவி வகித்து வந்த கல்பனா ஆனந்த குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் தனது ராஜினாமா கடிதத்தை தனது உதவியாளர் மூலம் வழங்கினார். மேயர் பதவியில் இருந்து கல்பனா ராஜினாமா செய்தது குறித்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவிக்கையில், “உடல் நிலை மற்றும் குடும்பச் சூழ்நிலை போன்ற தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநகராட்சி ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தை சரவணன் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Nellai Mayor Saravanan resigns

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது. இதில் 16 வது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த சரவணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து நெல்லை மாநகராட்சி மேயராக கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  சரவணன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதல், மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. மேலும் இது குறித்து திமுக தலைமைக்கும் நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு மேயருக்கு எதிராகப் புகார் மனு அளித்திருந்தனர். அதே சமயம் மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரி கவுன்சிலர்கள் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்திருந்தனர். இதையடுத்து மேயர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் கோவை, நெல்லை என அடுத்தடுத்து ஒரே நாளில் இரு மேயர்கள் ராஜினாமா செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே கோவை, நெல்லை மேயர்கள் மீதான புகார் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விசாரணை நடத்தி இருந்தார். இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி இரு மேயர்களும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.