திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் வேலுச்சாமியும், நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக சௌந்தரபாண்டியன் போட்டி போடுகிறார்கள்.
இந்த இரண்டு வேட்பாளர்களையும் ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி திண்ணைப் பிரச்சாரம் மூலமும் ஆதரவு திரட்டி வருகிறார்.
நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வத்தலகுண்டு ஒன்றியத்தில் உள்ள தும்மலப்பட்டி, மேட்டூர் ஊத்தங்கரை புதுப்பட்டி, குரும்பப்பட்டி,கோம்பபட்டி, குளிப்பட்டி, குன்னுவாரயன்கோட்டை உள்பட சில பகுதிகளுக்கு கழகத்தின் துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ .பெரியசாமியும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு மாவட்ட செயலாளருமான சக்கரபாணியும் சென்று அப்பகுதி மக்களை அங்கங்கே திரட்டி திண்ணைப் பிரச்சாரம் மூலம் கலைஞர் செய்த திட்டங்களையும், செய்த சலுகைகளையும் சொல்லி அப்பகுதி வாக்காள மக்களிடம் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் வேலுச்சாமிக்கும் அதுபோல் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டி போடும் திமுக வேட்பாளரான சௌந்திர பாண்டியனுக்கும் உதயசூரியன் சின்னத்தில் ஓட்டுப் போட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
அப்பொழுது தும்மலப்பட்டி பொதுமக்களிடம் முன்னாள் அமைச்சர் ஐ பெரியசாமிபேசும் போது...
வத்தலக்குண்டு யூனியன் சேர்மனுக்கு இந்தப் பகுதியில் நான் முதன்முதலில் போட்டி போட்ட போது என்னை வெற்றி பெற வைத்தீர்கள். அந்த நன்றியை இப்ப வரை மறக்காமல் இருந்து வருகிறேன். அதுபோல் இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டி போடும் வேலுச்சாமிக்கும், நிலக்கோட்டை சட்டமன்ற இடைத் தொகுதியில் போட்டியிடும் சௌவுந்திர பாண்டியனுக்கும் உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களித்துஅமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இதுவரை இந்த நிலக்கோட்டை தொகுதியில் தொகுதி பக்கம் வராதவர்களுக்கும், தொகுதியில் நன்றி சொல்லாத வர்களுக்கும், அடையாளம் தெரியாதவர்களுக்கும் வாக்களித்து வந்தீர்கள். இந்த முறையாவது உங்களை நாடி வந்துள்ள எங்களுக்கு வாக்களியுங்கள் மத்தியில் இருக்க கூடிய மோடி அரசும், மாநிலத்தில் இருக்கக்கூடிய எடப்பாடி அரசும் மக்களின் விரோத அரசாக தான் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் இந்த தேர்தலுக்குப் பிறகு அந்த ஆண்டவனே வந்தாலும் இந்த எடப்பாடி அரசை காப்பாற்ற முடியாது.
மத்தியில் வரக்கூடிய காங்கிரஸ் அரசும் தேர்தல் அறிக்கைகளை மக்களுக்கு அறிவித்து உள்ளது. அதில் முக்கியமான திட்டம் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அதுபோல் மக்களுக்கு வருடத்திற்கு 72 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அதாவது மாதம் 2000 ரூபாய்வீதம் அதுபோல் நிறுத்திவைக்கப்பட்ட முதியோர் தொகை அனைத்தும் உங்கள் வீடு தேடி கொடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்க சட்டம் கொண்டுவரப்படும் என தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்திருக்கிறார்.
அதுபோல் வங்கிகளில் பெண்கள் 50 ஆயிரம் வரை தொழில் சிறு தொழில் செய்வதற்கு தாங்களாகவே போய் கடன் வாங்கிக் கொள்ளலாம். அது போல் 100 நாள் திட்டத்தை 150 நாள் ஆக உயர்த்தி சம்பளமும் 300 ரூபாயாக கொடுக்க இருக்கிறார்கள். இப்படி அகில இந்திய காங்கிரஸ்தலைவர் ராகுல் காந்தியும், ஸ்டாலினும் தேர்தல் அறிக்கை மூலம் மக்களுக்கு பல திட்டங்களை அறிவித்து இருக்கிறார்கள். அதன் மூலம் நீங்கள் கூடிய விரைவில் பயனடையப் போகிறார்கள் என்று கூறினார்.
இந்த திண்ணை பிரச்சாரத்தின்போது மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி, வத்தலகுண்டு ஒன்றிய செயலாளர் முருகன், ஒட்டன்சத்திரம் ஒன்றிய செயலாளர் ஜோதிஸ்ஈஸ்வரன், கூடலூர் ராஜா.அமபாத்துரைரவி, விவேகானந்தன் உட்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.