
கடலூர் மாவட்டம் ராமாபுரம் என்ற இடத்தில் உள்ள புறவழிச்சாலையில் இரு சக்கர வாகனம் (பைக்) ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த வாகனத்தில் முந்திரி தோட்டத்திற்கு விவசாய கூலி வேலைக்காக நேரு, கல்பனா மற்றும் சரண்யா என மூவர் பயணித்துள்ளனர். அச்சமயத்தில் அங்கு வந்த கார் இரு சக்கர வானத்தின் மீது மோதியுள்ளது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த மூவரும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திலேயே கல்பனா, சரண்யா ஆகிய இவரும் உயிரிழந்தனர்.
அதே சமயம் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நேருவை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்றையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கடலூரில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை - பெங்களூரு இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் வாணிச்சத்திரம் என்ற இடத்தில் முன்னால் சென்ற லாரி மீது, ஆட்டோ, லாரி, கார் அடுத்தடுத்து மோதியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி ஆட்டோவில் இருந்த சிறுமி நிஜிதா (வயது 9) உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கு காரணமாக முன்னால் சென்ற லாரி திடீரென ப்ரேக் அடித்ததால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.