Skip to main content

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தி.மு.க போட்டியிடும் - முதல்வர் நாராயணசாமி!

Published on 10/11/2018 | Edited on 10/11/2018


புதுச்சேரி சட்டசபை வளாகத்தில்  இன்று முதல்வர் நாராயணசாமி  செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், 

 

DMK to contest in Dattanadavai by-election - Chief Minister Narayanasamy

 

 
" பணமதிப்பிழப்பு என்ற கொள்கையால்  மத்திய அரசு ஏற்படுத்திய திட்டம் மூலம் பல பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இந்த நாட்டில் அடிப்படை திட்டங்களில் 2% வளர்ச்சி குறைந்து உள்ளது. 

 

சந்திரபாபு நாயுடு ஒவ்வொரு கட்சி தலைவர்களையும் சந்தித்து வருகிறார். இதன் மூலம் மதசார்பற்ற அணிகள் ஒன்றிணையும். எதிர்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் இருக்கும் பா.ஜ.கட்சிக்கு எதிராக ஒன்று சேர்ந்து குரல்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலும்,  ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்று நோக்கத்திலும் அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து வருகின்றன.
இந்த முயற்சி பலன் அடையும். 


இலங்கை நாட்டில் ஜனநாயகம் தழைக்க வேண்டும். புதுச்சேரியில் ரூ.326 கோடியில் பாரதி மில், சுதேசிமில், ஏ.எப்.டி. சர்க்கரை ஆலை உட்பட கூட்டுறவு நிறுவனங்கள் புணரமைக்கப்பட உள்ளன. அதற்காகவே அந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

 

துணை நிலை ஆளுநர் கிரண்பேடி  நிதி அதிகாரம் வழங்கும் கோப்புகளை சரியான முறையில் அனுப்புவது இல்லை. மேலும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிதி வழங்க முடியாமல் முட்டுக்கட்டை போடும் நிலையில், இந்த அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறார். அதேசமயம்  தொழிலாளர்களுக்கு பாதிப்பு வராத அளவில், எங்கள் அரசு பாதுகாத்து வருகின்றது. 

 

ஜிப்மர் மருத்துவமனையில், உறுப்புமாற்று அறுவை சிகிச்சை மையம், இதய மாற்றம்  செய்யும் சிகிச்சை மையம் சேதராப்பட்டு பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு ரூ.1200 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. புதுச்சேரியில் மருத்துவம் படித்த மாணவர்கள் 50 பேருக்கு 10 ஆண்டுகளுக்குள் தேர்வு எழுத அனுமதி வழங்க உள்ளோம்" என்றார்.

 

சொத்துக்குவிப்பு வழக்கில் எம்.எல்.ஏ பதவி பறிபோன தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,

 
"தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ தகுதி நீக்கம் செய்து உள்ள நிலையில் அங்கு ஏற்கனவே காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க வேட்பாளர் நின்று தோல்வியுற்றதால் இடைத்தேர்தலில் திமுக போட்டியிட ஆதரவளித்து, தி.மு.க கட்சி வேட்பாளர் வெற்றி அடைய பாடுபடுவோம்" என்றார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.