Skip to main content

சூரியனோடு இலை போட்டியில்லை! இ.பி.எஸ்.சொன்ன அஸ்திரம்...!

Published on 08/02/2019 | Edited on 08/02/2019
cm

 

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி உடன்படிக்கையை நோக்கி முடிவை எட்டும் தருவாயில் உள்ளது  தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும். ஒவ்வொரு கட்சி தலைமையிலும் யாருக்கு எத்தனை சீட் என்ற கணக்குகள் விவாதப் பொருளாக அரசியல் வட்டாரத்தை சூடேற்றி வருகிறது. இந்நிலையில் அ.தி.மு.க. ஒரு மறைமுக அஸ்திரத்தை திட்டமாக போட்டுள்ளது. இது சம்பந்தமாக கொங்கு மண்டல சீனியர் அமைச்சர் ஒருவர் நம்மிடம் ஆப் தி ரெக்காடாக தேர்தலும் அரசியல் நிலவரங்களும் பற்றி பேசினார்.

 


 அப்போது அவராக கூறியது தான் அந்த மறைமுக அஸ்திரம்.   "போன வாரம் சி.எம்.பழனிச்சாமி யோட ஒரு பங்ஷன் முடிச்சுட்டு பேசிகிட்டு இருந்தோம்.   ஓ.பி.எஸ்,தங்கமணி, வேலுமணி எல்லோரும் இருந்தோம்.  அப்ப சி.எம்.பழனிச்சாமி சொன்ன கணக்கு எங்களுக்கெல்லாம் சரியாத்தான் பட்டுது.   அதாவது பி.ஜே.பி. உட்பட கூட்டணி கட்சிக்கெல்லாம் சேர்ந்து இருபது தொகுதி போயிடும் மீதி தோராயமாக இருபது தொகுதியில அ.தி.மு.க.போட்டினு வெச்சுக்குவோம். அதே போல தி.மு.க. கூட்டணியில காங்கிரஸ் உட்பட 6 கட்சி இருக்குது அங்கயும் கூட்டணிக்கு இருபது தொகுதி போக மீதி இருபது இருக்கும்.

 

தி.மு.க. கூட்டணியில காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், ம.தி.மு.க., வி.சி.க. என இந்த கட்சிகள் போட்டியிடக்கூடிய  பெரும்பாலான தொகுதிகளில் மட்டும் அ.தி.மு.க.நேரிடையாக போட்டியிட வைப்போம்.   காரணம் தி.மு.க. கூட்டணி கட்சிகள் செலவு செய்யாது.   ஓட்டுக்கு பணமும் கொடுக்காது.  அது நமக்கு வசதியாக இருக்கும்.   ஒரே வார்த்தையில சொல்லனுமுனா சூரியன் நிற்கிற இடத்துல இரட்டை இலை வேண்டாம்.   பெரும்பாலும் இதை தவிர்போம்.   அந்த கனக்கில் போட்டியிட்டால் உறுதியாக நாம் கூடுதல் இடங்களில் வெற்றி பெறலாம். நமது கூட்டணி கட்சி தி.மு.க.வோட மோதிட்டு போறாங்க என்று தான் சி.எம்.பழனிச்சாமி சொன்னார்.  அது சரியாத்தானே வருமுங்க சார்" என்றார் நம்மிடம்.


ஆக, தி.மு.க.வை நேரிடையாக எதிர்கொள்ளாமல் அக் கூட்டணி கட்சிகளிடம்  பணபலத்தால் எதிர்கொள்ளும் முடிவை எடுத்துள்ளது அ.தி.மு.க. 

 

சார்ந்த செய்திகள்