Skip to main content

கொங்கணாபுரம் ஆட்டுச் சந்தை களைகட்டியது; ரூ.4.50 கோடிக்கு வியாபாரம்!

Published on 27/10/2019 | Edited on 27/10/2019

தீபாவளி பண்டிகையையொட்டி கொங்கணாபுரத்தில் ஆடுகள் விற்பனை களை கட்டியது. ஒரே நாளில் 4.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆயின.

 

diwali market

 

 

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தில் சனிக்கிழமை தோறும் கிராமச் சந்தை கூடுகிறது. தீபாவளி பண்டிகை என்பதால் இந்த வாரச் சந்தை, வழக்கத்தைவிட மிகவும் உற்சாகமாக இருந்தது.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் வீடுகளில் கோழிக்கறி, ஆட்டுக்கறி, மீன், முட்டை என அசைவ உணவுகளை சமைத்து குடும்பத்துடன் உண்பர். தீபாவளி என்பதால், அசைவ உணவுப்பதார்த்தங்கள் இன்னும் தூக்கலாகவே இருக்கும். புதுமணத்தம்பதிகள் உள்ள வீடுகளில் சிறப்பு அசைவ விருந்தும் உண்டு.

அதனால், அக். 26ம் தேதி நடந்த சந்தையில், வழக்கத்தைவிட ஆடுகள், கோழிகள் விற்பனை அதிகமாக இருந்தது. 10 கிலோ எடையுள்ள ஆடுகள் கிலோ 4800 ரூபாய் முதல் 5800 வரை விற்பனை ஆயின.

அதேபோல, 20 கிலோ எடையுள்ள ஆடுகள் 9200 முதல் 11400 ரூபாய் வரை விற்றன. சேவல் 850 ரூபாய் முதல் 3200 வரை விலை போனது. 

இவை மட்டுமின்றி, காய்கறிகளும் அமோகமாக விற்பனை ஆனது. பண்டிகை காலம் என்பதால் தேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி குறைவு காரணமாக காய்கறிகள் விலைகள் கணிசமாக உயர்ந்து இருந்தன.

ஆடுகளின் விலையும் வழக்கத்தைவிட 400 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை கூடுதலாக விலை போனது. இன்று ஒரே நாளில் ஆடுகள், காய்கறிகள், சேவல்கள் என 4.50 ரூபாய்க்கு கோடிக்கு வர்த்தகம் நடந்ததால், சந்தை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்