கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு பழனி பணிமனையிலிருந்து திருச்சி வரை செல்லும் அரசுப் பேருந்து ஓட்டுநர் விஜயகுமார் பழனியில் கன மழையில் ஓட்டுநர் இருக்கையில் நனைந்து கொண்டே பேருந்தின் அவல நிலையை காட்டியதுடன் திருச்சியிலிருந்து 4 மணி நேரம் மழையில் நனைந்து கொண்டே பேருந்தை ஓட்டி வருவதாகவும்., ஜன்னல் திரை கூட இல்லை. நிர்வாகம் பேருந்துகளை பராமரிக்காமல் எங்களை ஓட்டச் சொல்கிறார்கள். இப்படி நனைந்து வரும் போது விபத்துகள் ஏற்பட்டால் என்ன செய்வது?
அதே போல பயணிகளும் மழையில் இருக்க முடியவில்லை முழுமையாக தண்ணீர் வடிகிறது என்று பேசிய வீடியோ பதிவு சமூகவலைதளங்களில் பரவியது.
இந்த வீடியோவை பரவ செய்தமைக்காகவும் அரசு போக்குவரத்து கழகம் பற்றி வெளியே பேசியதாவும் ஓட்டுநர் விஜயகுமாரை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளனர்.
இந்த பணி நீக்க உத்தரவை பார்த்து சக ஓட்டுநர்களோ.. உண்மையை சொன்னால் தண்டனையா? எல்லா அரசுப் பேருந்தும் இப்படித்தான் உள்ளது. விஜயகுமார் மீதான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்கின்றனர்.