'அந்நியன்' திரைப்படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், இயக்குநர் ஷங்கருக்கும், ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் ரீமேக்கை தயாரிக்கும் பென் ஸ்டூடியோ தயாரிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீஸில், 'அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஷங்கர் முறையான அனுமதி பெறவில்லை. அந்நியனுக்கு சுஜாதா எழுதிய கதை உரிமையைப் பணம் கொடுத்து வாங்கி வைத்துள்ளேன். உரிமம் என்னிடம் இருப்பதால், எனது அனுமதியின்றி ரீமேக் செய்வது சட்டவிரோதம்' என்று தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள இயக்குநர் ஷங்கர், 'அந்நியன் கதை, திரைக்கதையை எழுதித் தரக்கோரி நான் யாரிடமும் கேட்கவில்லை. அந்நியன் திரைப்படத்தின் கதை, திரைக்கதை எனக்கே சொந்தம். அந்நியன் படத்தில் வசனம் எழுதுவதற்காக மட்டுமே எழுத்தாளர் சுஜாதா பணியாற்றினார். அந்நியனின் வசனத்தைத் தவிர்த்து கதை, திரைக்கதை என எந்தப் பணியிலும் சுஜாதா ஈடுபடவில்லை. இந்தப் படத்தின் கதையைப் பயன்படுத்த முழுமையாக எனக்கு உரிமை உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.