Published on 23/03/2019 | Edited on 23/03/2019
திருப்பூர் ஏரகாம்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது அந்த வழியே ஜீப்பில் கொண்டுவரப்பட்ட 200 டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்தனர்.


பாறைகள் உடைக்கும் பணிக்கு பயன்படுத்தும் இந்த டெட்டனேட்டர்களை எந்தவித ஆவணங்கள் இன்றியும் பாதுகாப்பு இல்லாமலும் எடுத்து வந்த செல்வம், ஷாஜகான் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

திண்டுக்கல்லில் இருந்து டெட்டனேட்டர்களை திருப்பூர் எடுத்து வந்ததாகவும் தாராபுரத்தில் நடைபெறும் நான்கு வழிச்சாலை பணிக்காக கொண்டு செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.