koyambedu

ஆசியாவின் மிகப் பெரிய பேருந்து நிலையமான சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டியவர் கலைஞர். தி.மு.க. ஆட்சியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நிறைவடையும் நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதன் பின்னர் ஜெயலலிதா முதல்வராகி, கோயம்பேடு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.

Advertisment

கட்டியது யார், திறந்தது யார் என அரசியல் சர்ச்சை நிலவி வந்த நிலையில், இருவருக்கும் தனித்தனியாக கல்வெட்டுகள் அமைக்கப்பட்டன.

Advertisment

இந்நிலையில், அடிக்கல் நாட்டியது தொடர்பான கல்வெட்டில் உள்ள கலைஞரின் பெயர் மட்டும் கறுப்பு பெயிண்ட்டால் அழிக்கப்பட்டிருக்கிறது. இது என்ன வகையான அரசியல் நடவடிக்கை எனத் தெரியாமல் பயணிகளும் பொதுமக்களும் குழம்பியுள்ளனர்.

''யார் இதனை செய்தார்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் கோயம்பேடு பேருந்து நிலையம் என்றாலேநினைவுக்கு வருவது கலைஞர்தான், அங்கு உள்ள மெட்ரோ ரயில் என்றாலும் கலைஞர்தான் நினைவுக்கு வருவார். எத்தனை அரசியல் செய்தாலும் கலைஞரின் பெயரை மறைக்க முடியாது'' என்கின்றனர் உடன்பிறப்புக்கள்.

Advertisment