கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே குறவன்குப்பத்தை சார்ந்த கல்லூரி (மாணவி பெயர் மாற்றப்பட்டுள்ளது) காவியா. சமூகவலைதளங்களில் அவரது படத்தை அவதூறு செய்து பதிவிட்டதால் தற்கொலை செய்துகொண்டர். இதனையறிந்து அவரை திருமணம் செய்துகொள்ள இருந்த அவரது உறவினரான விக்னேஷ் என்ற இளைஞரும் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது.
சமூக வலைதளங்களில் ஆக்கபூர்வமான கருத்துகளை பதிவு செய்யாமல் இதுபோன்ற தாறு மாறான கருத்துகளை பதிவதால் பல்வேறு சிக்கல்கள் எழுகிறது. இது இந்தியா முழுவதும் இது போன்ற தீங்கு பரவுகிறது. எனவே மத்திய அரசு சமூக வலைதளங்களுக்கு புதிய விதிகளை வரையறுத்து கட்டுபாடுகளை விதிக்க வேண்டும். அரபுநாடுகளில் சமூக வலைதளங்கள் கட்டுபாட்டில் உள்ளது. ஆபாசங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஏன் இது போன்று இந்திய அரசு பயன்படுத்தகூடாது. பள்ளி மாணவர்களை குறிவைத்து ஆபாச வலைதளங்களை பார்க்கவைக்கிறார்கள். இது போன்ற சம்பவங்களில் அரசியல் ஆதாயம் தேட யாருக்கும் இடமளிக்க கூடாது.
நீட் தேர்வு முடிவால் மூன்று மாணவிகளின் உயிர்கள் பலியாகியுள்ளது. தமிழக மட்டுமல்ல தேசியளவில் நீட் தேர்வை ரத்து செய்ய விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டுகொள்கிறது. நீட்டை ரத்து செய்ய தொடர்ந்து போராடும். நீட் தினிப்புக்கு பிறகு உயர் ஜாதி எண்ணிக்கைகள் அதிகரித்துள்ளது. ஏழை மாணவர்கள் அதிகளவில் வெற்றிபெற முடியவில்லை.
ஹைட்ரோகார்பன் திட்ட பேரழிவு தீங்கை கண்டித்து மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை 596 கி.மீ தூரம் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்தவர்கள் பங்கேற்பார்கள். இதுவிவசாயிகள் பிரச்சனை என்று பொதுமக்கள் விலகி இருக்ககூடாது. இதனை கட்சி,சாதி,மதம் வித்தியாசம் இல்லாமல் அனைவரும் கலந்து கொண்டு இந்த திட்டத்தை விரட்டியடிக்கவேண்டும்.
இந்த திட்டத்தை விரட்டியடிக்க திமுக தலைமையில் கூட்டணி கட்சிகளை சார்ந்தவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். தற்போது திமுக தலைவரை சந்தித்து ஆலோசனை செய்து ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக வலுவான போராட்டத்தை நடத்தவுள்ளோம்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி இந்திய வரலாற்றில் இல்லாத வகையில் அமைச்சரவையை அமைத்துள்ளார் வரவேற்க தக்கது. அனைத்து சமூகத்தை சார்ந்தவர்களை 5 பேரை துணை முதல்வராக அறிவித்து தலித் சமூகத்தை சார்ந்த பெண்ணுக்கு உள்துறை அமைச்சர் வழங்கி இருப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. மானமாற பாராட்டுகிறது.
அதேபோல் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துள்ளது. இதனை தமிழக அரசு பின்பற்றவேண்டும். புதிய கல்வி கொள்கை ஆபத்தானது. கல்வி கொள்ளை வடிவில் காவி கொள்கையை தினிக்கபார்க்கிறது. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்கள் பணிகாலத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்.
ஜாக்டோஜீயோ தலைவரை ஓய்வு பெறும் நாளில் பணிநீக்கம் செய்தது பரிவாங்கும் நடவடிக்கை. கூடங்குளத்தில் அனுகழிவு உலை அமைக்கும் முடிவை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் எனவே மத்திய அரசு இதனை கைவிடவேண்டும்’’ என்றார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் பால.அறவாழி, மாநில நிர்வாகி தாமரைசெல்வன், மாவட்ட செய்திதொடர்பாளர் திருவரசு உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்.