Published on 06/11/2020 | Edited on 07/11/2020

கடலூரில் சிறைக்கைதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், போலீசாரால் தாக்கப்பட்டுதான் சிறைக் கைதி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இறந்த கைதியான செல்வமுருகனின் உடலில் காயங்கள் இருந்ததாக அவரது மனைவி குற்றம் சாட்டியிருந்தார்.
தற்போது செல்வமுருகனின் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி காவல் துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.