ஆசிரியர்கள் நடத்திவரும் ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடைக்கோரிய வழக்கில், இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்த விசாரணையில், அரசு சார்பாக சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. அரசின் நிதிநிலை சம்பந்தமாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. அரசும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களும்தான் பேசிக்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
அதேபோல் ஜாக்டோ ஜியோ அமைப்பு சட்டப்படி உரிமை கோரி நீதிமன்றத்தில் அணுகவில்லை. அதற்கு மாறாக தெருவில் இறங்கி போராடுகிறீர்கள். எனவே இந்த நேரத்தில் எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறினார்.
ஜாக்டோ ஜியோ தரப்பில் நீங்கள் இதற்கு தகுந்த தீர்வு தருவீர்கள் என்ற அடிப்படையில்தான் இந்த போராட்டத்தை பின் வாங்கினோம். தற்போது இதற்கான தீர்வை நீதிமன்றம் தரும் என காத்திருந்தோம் என கூறப்பட்டது. அதற்கு பதிலளித்த நீதிபதிகள், நீங்கள் சரியான வழியில் வரவில்லை எனவே எந்த தீர்ப்பும் வழங்கப்படமுடியாது. வேன்றுமென்றால் இந்த போராட்டத்திற்கு தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்கிறேன் என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.