மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எஸ். பழனிசாமியை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக உள்ள சுப்ரமணியன் மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் ஒரு சில மாவட்டங்களின் ஆட்சியர்களையும் இடமாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த அண்ணாதுரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக நியமனம்.

அதேபோல் சென்னை பெருநகர இணை ஆணையர் கோவிந்த ராவ் தஞ்சை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம். விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த சிவஞானம் சுகாதாரத்துறை இணைச்செயலாளராக நியமனம். குடிமை பொருள் வழங்கல்துறை ஆணையர் கண்ணன், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம். மாநில தேர்தல் ஆணைய செயலராக இருந்த எஸ்.பழனிசாமி டவுன் பஞ்சாயத்து இயக்குனராக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.
மேலும் கலை, கலாசாரத்துறை ஆணையராக இருந்த சிஜி தாமஸ் பள்ளிக்கல்வித்துறை ஆணையராக நியமனம். மதுரை முன்னாள் மாவட்ட ஆட்சியர் ராஜசேகர் மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தலைவராக நியமனம். வேளாண்துறை செயலாளர் முனியநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையராக நியமனம். ஆதிதிராவிடர் வீட்டுவசதி, மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குனராக முனியநாதனுக்கு கூடுதல் பொறுப்பு. ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் முரளிதரன், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் மேலாண் இயக்குனராக நியமனம்.