Published on 07/04/2020 | Edited on 07/04/2020
கரோனா தொற்று நோய் பாதிப்பு இருக்கிறது எனத் தெரிந்தும் கரோனாவைப் பரப்பியதாக இந்தோனேஷியர்கள் 11 பேர் உள்பட 18 பேர் மீது சேலம் மாநகர காவல்துறையினர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை அரசு மருத்துவமனையில் கரோனாவுக்குச் சிகிச்சை பெற்று வரும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த முகமது, சோனியாமன்ட் உள்பட 6 பேர் மீது சூரம்பட்டி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சுற்றுலா விசாவில் வந்து மதப்பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும் தாய்லாந்து, இந்தோனேஷியர்கள் மீது காவல்துறையினர் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 32 பேரும், சேலத்தில் 12 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.