Skip to main content

சென்னையில் இருவருக்கு கரோனா... தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆனது  

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

தமிழகத்தில்  ஏற்கனவே  கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆக இருந்த நிலையில் துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கு தற்போது கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி  எண்ணிக்கையானது 27 ஆக அதிகரித்திருந்தது.

 

Coronation affects 29 people in Chennai ...

 

இந்நிலையில் தற்பொழுது மேலும் இரண்டு பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 29 ஆக உயர்ந்துள்ளது. லண்டனில் இருந்து சென்னை வந்த 24 வயது இளைஞர் மற்றும் 65 வயது பெண் ஆகிய இருவருக்கும் கரோனா உறுதியாகி உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்