Skip to main content

கரோனா வைரஸூக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறும் சித்த மருத்துவர்!

Published on 14/03/2020 | Edited on 14/03/2020

சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. 125 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பாதிப்பால் இது வரை 5,000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இதேபோல் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,37,000 பேருக்கு மேல் உள்ளது. இந்தியாவிலும் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கு முறையான மருந்து தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

 

Corona virus medicine - Siddha doctor explanation

 



இந்நிலையில் சென்னை ஜெய் நகர் கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்தமருத்துவமனையின் மருத்துவர் க. திருத்தணிகாசலம் கரோனா வைரஸூக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறிவருகிறார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை ஒரே மருத்துவமனைக்கு மாற்றுங்கள். அவர்களுக்கு அரசு மருத்துவர்கள் சிகிச்சை தரட்டும். நோயாளிகள் மருத்துவர்கள் கொடுக்கும் மருந்தோடு சேர்த்து நான் கொடுக்கும் மருந்தையும் எடுத்துக்கொள்ளட்டும். இதனால் எந்த பின்விளைவும் வராது. இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் இந்த நோயால் ஏற்படும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய பண்பு இரண்டு அல்லது மூன்று நாட்களில் மாறிவிடும். 10 நாட்களில் இந்தியாவில் உள்ள அனைத்து கரோனா நோயாளிகளையும் நான் குணமாக்கிவிடுவேன். இந்த நோய் மற்றவர்களுக்கு பரவுவதை தடுத்து விடுவேன். 

நான் பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளேன். நானும் இந்த நோயினால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளேன். அதனால் நானும் கரோனா மருந்தை எடுத்துக்கொண்டிருக்கிறேன். என்னை அனுமதித்தால் சீனாவில் இருக்க கூடிய வூகான் மாகாணத்திற்கு செல்ல தயாராக உள்ளேன். சீனா வரை கூட போக வேண்டாம், இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் ஸ்பெஷல் வார்டுக்கு என்னை விடுங்கள். அதனால் என் உயிருக்கு வரும் ஆபத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.  

ஒரே நேரத்தில் அங்குள்ள அனைத்து நோயாளிகளையும் தர முடியாது என்றாலும் கூட எனக்கு 5 நோயாளிகளை தாருங்கள். 48 மணி நேரம் காலஅவகாசம் கொடுங்கள். அந்த மருந்துகளை நான் சாப்பிட்ட பின்பே அந்த நோயாளிகளுக்கு கொடுக்கிறேன். மத்திய அமைச்சர் முன்பு அந்த மருந்தை நான் சாப்பிட்டு காட்டினேன். மத்திய அமைச்சரும் அதை சாப்பிட்டு பார்த்தார். என்னிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளை 48 மணிநேரம் கழித்து பரிசோதித்து பாருங்கள். அவர்கள் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தால் அனைத்து நோயாளிகளையும் என்னிடம் தாருங்கள். கரோனா வைரஸ் அச்சத்தால் மாஸ்க் விலை அதிகரித்து உள்ளது. அதை அணிவதால் கரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாது. நான் கூறிய மருந்தை தற்போது சீனா பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. நான் மூன்று மாதங்களாக, கரோனா வைரஸால் உயிரிழப்பதை தடுக்கும் மருந்து என்னிடம் உள்ளது என்று கூறி வருகிறேன். அதை கேட்பதற்கு ஆளில்லை" என தெரிவித்தார்.

     

 

சார்ந்த செய்திகள்