
தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் ஒருநாள் கரோனா பாதிப்பு 8,981- ல் இருந்து 10,978 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 10,932 பேர், வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்த 46 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,39,253 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் கரோனா பாதிப்பு 10,978 ஆக உள்ளது.
சென்னையில் மேலும் 5,098 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல், செங்கல்பட்டில் 1,332 பேருக்கும், திருவள்ளூரில் 591 பேருக்கும், கோவை 585 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 309 பேருக்கும், நெல்லையில் 162 பேருக்கும், விருதுநகரில் 159 பேருக்கும், கன்னியாகுமரியில் 139 பேருக்கும், ஈரோட்டில் 131 பேருக்கும், ராணிப்பேட்டையில் 128 பேருக்கும், சேலத்தில் 126 பேருக்கும், விழுப்புரத்தில் 101 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 97 பேருக்கும், தஞ்சையில் 94 பேருக்கும், நீலகிரியில் 78 பேருக்கும், திருவண்ணாமலையில் 79 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பால் மேலும் 10 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,843 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 40,260 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவில் இருந்து மேலும் 1,525 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 27,10,288 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.