இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தூத்துக்குடியில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மூன்றாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
![School and college holidays due to heavy rain in three districts](http://image.nakkheeran.in/cdn/farfuture/Fk37lpe2SrlGScvuQ34TEJqAEH0cHAt-K5uIlYGzh-Y/1572400244/sites/default/files/inline-images/00013_0.jpg)
மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, வேலூர், சிவகங்கை மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல் கொடைக்கானல் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை காஞ்சிபுரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை. வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். மழை காரணமாக ராமநாதபுரம், தேனி, விருதுநகர், மதுரையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.