கடந்த ஜனவரி மாத இறுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் பொது முடக்கத்தை நீட்டிக்க தமிழக அரசு தற்போது உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதில், பிப்ரவரி 28 வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுகிறது. பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். அதேபோல் தமிழகத்தில் இளங்கலை, முதுகலை படிக்கும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, வரும் பிப். 8-ஆம் தேதி அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் நிலையில், வாரத்திற்கு ஆறு நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தக் கல்வியாண்டு முழுவதும் வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே கல்லூரிகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.