Skip to main content

சென்னை வந்த பிரதமர்; வரவேற்ற முதல்வர்!

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

CM Stalin welcomed PM Modi on his arrival in Chennai with bouquet of flowers

 

தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.


தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வந்துள்ள பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடத்தை இன்னும் சற்று நேரத்தில் திறந்து வைக்கவிருக்கிறார்.

 

ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள பிரதமருக்கு விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இவர்களைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் பிரதமரை வரவேற்றனர். மோடியின் வருகையால் சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக எதிர்க்கட்சிகள் அனைவரும் வருந்துவார்கள்” - பிரதமர் மோடி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 PM Modi says Opposition parties will regret the Supreme Court verdict at electoral bond

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

முதற்கட்ட வாக்குப்பதிவானது, தமிழ்நாடு, உத்தரகாண்ட், சிக்கிம், மிசோரம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் உள்ள மொத்தம் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தமிழ்நாடு உள்பட மாநிலங்களில் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் தொடங்க இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. 

அந்த வகையில், இந்தியா முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் மோடி, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்தியேக பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், “தேர்தல் பத்திரங்கள் மூலம் நீங்கள் பணத்தின் வழியைப் பெறுகிறீர்கள். எந்த நிறுவனம் கொடுத்தது? எப்படி கொடுத்தார்கள்? எங்கே கொடுத்தார்கள்? அதனால்தான் நான் சொல்கிறேன், இனியாவது எதிர்க்கட்சிகள் நேர்மையாக நடந்து கொள்ள வெண்டும். தேர்தல் பத்திரங்களை ரத்து செய்யும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் அனைத்தும் வருந்தும்.

அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற சட்டங்கள் ஏன் அரசால் கொண்டு வரப்படவில்லை. மாறாக, தேர்தல் கமிஷன் சீர்திருத்தங்கள் என அரசால் கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சிகளின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் தேர்தல் கமிஷனர்களாக்கப்பட்டனர். அந்த அளவில் எங்களால் விளையாட முடியாது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது எங்களின் அர்ப்பணிப்பு. நாட்டில் பலர் களமிறங்கியுள்ளனர். மிகவும் நேர்மறையான மற்றும் புதுமையான பரிந்துரைகள் வந்துள்ளன. இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த முடிந்தால் நாட்டுக்கு நிறைய நன்மை கிடைக்கும். 

துரதிர்ஷ்டவசமாக, இந்த நாட்களில், ஒரு வார்த்தையில் எந்த அர்ப்பணிப்பும் பொறுப்பும் இல்லை. ராகுல் காந்தியின் ஒவ்வொரு எண்ணமும், முரண்படும் பழைய வீடியோக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும்போது, ​​இந்தத் தலைவர் பொதுமக்களை ஏமாற்றப் பார்க்கிறார் என்று நினைக்கிறார்கள். சமீபத்தில், ஒரு அரசியல்வாதி ‘வறுமையை ஒரே அடியில் அகற்றுவேன்’ என்று சொல்வதைக் கேட்டேன். 5-6 தசாப்தங்களாக ஆட்சியில் இருக்க வாய்ப்பு கிடைத்தவர்கள், இப்படிச் சொல்லும்போது, ​​இந்த மனிதன் என்ன சொல்கிறார் என்று நாடு நினைக்கிறது?” என்று கூறினார். 

Next Story

1857 கி.மீ. சைக்கிள் ஓட்டும் போட்டியில் வென்ற கொரியத் தமிழர்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Korean Tamil wins cycling competition

உலகம் முழுவதும் தமிழர்கள் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், பணிபுரியும் நாட்டில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து, சாதனை புரிபவர்கள் மிகவும் சிலரே இருக்கிறார்கள். அப்படி பல துறைகளிலும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சாதனை புரிந்த தமிழர்களைக் கவுரவிக்க, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விழா நடத்தி விருது வழங்குகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர் விருது வழங்கும் விழா 2024 ஜனவரியில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.  மூன்றாம் ஆண்டாக நடைபெற்ற இந்த அயலகத் தமிழர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவியல், தொழில், சமூக சேவை, விளையாட்டு என 8 பிரிவுகளின் கீழ் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 14 அயலகத் தமிழர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 218 உலகத் தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருதுபெற்ற 14 அயலகத் தமிழர்களில், அவர்களில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள குதிரைகுத்தி கிராமத்தைச் சேர்ந்த முனைவர் குருசாமி ராமன் தனித்த சிறப்புடையவர். இவருக்கு விளையாட்டில் சாதனை புரிந்த தமிழர் பிரிவில், தமிழ்நாடு அரசின் கணியன் பூங்குன்றனார் விருது, தங்கப் பதக்கத்துடன் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

Korean Tamil wins cycling competition

முனைவர் குருசாமி ராமன், கொரியாவில் 1857 கிலோமீட்டர் தூரமுள்ள சைக்ளிங் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியத் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர். இதன்மூலம், தமிழ்நாட்டுக்கும், கொரியாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.குதிரை குத்தி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி – மாரியம்மாள் தம்பதியின் மகனாக, பின்தங்கிய கிராமத்தில் பிறந்த முனைவர் ராமன் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலைக்கழகத்தில் ஜினோமிக்ஸ் பிரிவில் ஆராய்ச்சியாளராகவும் உதவி பேராசிரியராகவும் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலையில் கடந்த பத்து வருடங்களாக பணிபுரிகிறார். முனைவர் ராமன், மனைவி பொன் அருணா மற்றும் மகள் அதிராவுடன் தென் கொரியாவில் வசித்து வருகிறார்.