இயக்குனர் பாரதிராஜாவின் துணைவேந்தர் நியமனம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,
இசை கல்லூரி துணைவேந்தர் தேர்தெடுப்பு, தேடல் குழுவின் பரிந்துரையின்படிதான் நடந்தது. எந்தவித உள்நோக்கமும் இல்லாமல்தான் பிரமிளா குருமூர்த்தி அவர்கள் தெர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் தந்தை ஒரு தமிழர் எனவே அதன்வழி பார்த்தால் அவரும் ஒரு தமிழர்தான் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். அவர் குயின் மேரிஸ் கல்லூரியில் துறை தலைவராக பணியாற்றியவர்.
2010-ல் திமுக ஆட்சியில் சட்டப்பல்கலைகழக துணைவேந்தராக விஜயகுமார் நியமிக்கப்பட்டார் அவர் கர்நாடகாவை சேர்ந்தவர்தானே அப்போது அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டார்களே! எனவே இவை எல்லாம் தேடல் குழுவின் பரிந்துரைபடிதான் நடந்தது.
இயக்குனர் பாரதிராஜா துணைவேந்தர் நியமனத்தை குறைசொல்கிறாரே அவர் பணியாற்றிய துறையில்,தென்னிந்திய திரைப்படத்துறையில் தலைவர் தமிழரா, தயாரிப்பாளர் சங்க தலைவர் யார்? தமிழரா, அப்பொழுது உங்கள் துறையிலேயே சரியில்லாத பொழுது அடுத்தவர்கள் மேல் குறைசொல்வது தவறு. இதனால் நாங்கள் தவறிழைத்தவர்கள் என்பதில்லை. அவர்கள் தவறே இல்லாமல் தேடல் குழுவின் பரிந்துரைபடிதான் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளை கேரளாவில் நடக்கவிருக்கும் நிதித்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பது பற்றி அரசுதான் முடிவு செய்யும். முடிவு செய்யப்பட்டபின் முடிவுகள் தெரிவிக்கப்படும். கேரளாவை காட்டிலும் நாம் முன்னேறிதான் இருக்கிறோம். நாம் நன்றாக செயல்படுகின்ற மாநிலம் எனவே நமக்கு கிடைக்கவேண்டிய நிதி கண்டிப்பாக கிடைக்கும் அதில் எந்த மாற்றமுமில்லை.