சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி சின்ன சிவாகுமார் தனது கூட்டாளி ராஜ்குமாருடன் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வலசை பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செஞ்சி அருகே உள்ள வலசை என்னும் பகுதியில் பிரபல ரவுடி சின்ன சிவக்குமார் தனது கூட்டாளி ராஜ்குமாருடன் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின் அடுத்து அங்கு சென்று போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி சின்ன சிவகுமார் மற்றும் அவரது கூட்டாளி ராஜ்குமார் ஆகிய 2 பேரையும் மயிலாப்பூர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சின்னா சிவகுமார் மற்றும் அவரது கூட்டாளியான ராஜ்குமார் ஆகிய இருவரிடம் இருந்து எட்டு பட்டாக்கத்திகளையும் ஒரு துப்பாக்கியும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சமூக விரோத செயலில் ஈடுபடும் நோக்கில் திட்டம் தீட்டி விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வலசை பகுதியில் பதுங்கி இருந்ததாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல ரவுடி சின்ன சிவாகுமார் மீது கொலை வழக்குகள் உட்பட பல காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவில் நாட்டு வெடிகுண்டு வீசி பெண் வழக்கறிஞரை கொலை செய்ய முயன்ற வழக்கிலும் இவருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.