Published on 03/10/2020 | Edited on 03/10/2020

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாளை (04/10/2020) ஒரு நாள் மட்டும் மெட்ரோ ரயில்கள் காலை 07.00 மணிக்கு பதிலாக காலை 06.00 மணிக்கே தொடங்கும். நாளை சிவில் சர்வீஸ் தேர்வு (UPSC EXAM) நடைபெற உள்ளதால், மெட்ரோ ரயில்கள் ஒரு மணி நேரம் முன்னதாக இயக்கப்படுகின்றன. ரயில் சேவைகள் நாள் முழுவதும் உச்சநேரம் (Peak Hours) இல்லாமல் இயங்கும்.” இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.