Skip to main content

'போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய இதுவே சரியான தருணம்!' - உயர்நீதிமன்றம் கருத்து!

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

chennai high court pocso act correction needed judge

 

போக்சோ சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டுவர இதுவே தக்க தருணம் என்று உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

 

மைனர் பெண்ணைக் கடத்தி திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக இந்திரன் என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, பெண்ணுக்குத் திருமணம் செய்ய வழக்குத் தடையாக இருப்பதாகக் கூறி தாயும், மைனர் பெண்ணும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். 

 

இந்த வழக்கு இன்று (29/01/2021) விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி, போக்சோ சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வர இதுவே தக்க தருணம். காதல் உறவில் உள்ள பல பதின்பருவ இளைஞர்கள் போக்சோ சட்டத்தால் தங்கள் வாழ்க்கையை இழந்து விடுகின்றனர் என்று கூறி அந்தப் பெண்ணின் திருமணம் பாதிக்கப்படுவதால் இந்திரன் மீதான வழக்கை ரத்துசெய்வதாக உத்தரவிட்டார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

போக்சோ வழக்கு; எடியூரப்பாவிடம் விசாரணை!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Former Karnataka CM BS Yediyurappa POCSO case

கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான எடியூரப்பா 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இவர் மீது கடந்த மார்ச் 15 ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பெங்களூர் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், பெங்களூர் சதாசிவ நகர் காவல்நிலையத்தில், எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அதே சமயம் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே, எடியூரப்பா மீது போக்சோ வழக்கு தொடர்ந்த 17 வயது சிறுமியின் தாயாரான 54 வயது பெண் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி திடீரென்று நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்தார். இது குறித்தும் சதாசிவ நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Former Karnataka CM BS Yediyurappa POCSO case

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன் அனுப்பியிருந்த நிலையில், ஜூன் 17 ஆம் தேதி சிஐடி முன்பு விசாரணைக்கு ஆஜராவதாக எடியூரப்பா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இது தொடர்பான வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய சிஐடி வாரண்ட் பிறப்பித்தது. இதனையடுத்து சிஐடி விசாரிக்கப்பட்டு வரும் புகாரை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘அவர் முன்னாள் மாநில முதல்வர். அவர் நாட்டை விட்டா ஓடிவிடுவார்?. பெங்களூரில் இருந்து டெல்லிக்கு கிளம்பி அவரால் என்ன செய்ய முடியும்?. உடல் நலக்குறைவு உள்ள மனுதாரரான முன்னாள் முதல்வரை கைது செய்து காவலில் வைக்கும் முடிவுக்கு நாம் உடனடியாகச் உத்தரவிட முடியாது. அதனால் ஜூன் 17ஆம் தேதி அன்று அடுத்த விசாரணை நடைபெறும். அதுவரை அவரை கைது செய்ய முடியாது’ என்று கூறி, எடியூரப்பா கைதுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிஐடி அதிகாரிகள் முன்பு இன்று (17.06.2024) காலை 10:50 மணிக்கு ஆஜரானர். இதனையடுத்து எடியூரப்பாவிடம் சிஐடி அதிகாரிகள் 3 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

‘பாலியல் தொல்லையால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை...’ - நீதிமன்றம் வேதனை

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
court anguish incident affects not only the women concerned

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மோகன கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய பெண்ணுக்கு, மோகன கிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாக விசாகா கமிட்டியில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அங்கு நடைபெற்ற விசாரணையில் மோகன கிருஷ்ணன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மோகன கிருஷ்ணன் மீது வழக்கு பதிவுசெய்து போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், தன் மீதான பாலியல் புகாரை எதிர்த்து மோகன கிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி கூறியதாவது, ‘பணியிடங்களில் பாலியல் தொல்லையால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. இந்தச் சம்பவங்கள் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பணியிடங்களில் பாலியல் தொல்லை நெறிபிறண்ட செயல் மட்டுமல்லாமல், மறைமுக சமூக பிரச்சனையாகவும் உள்ளது. பணியிடத்தில் பெண்களுக்கான அதிகாரத்தை மட்டுப்படுத்துவதுடன் மன, உடல் ரீதியாகவும் பெண்களைப் பாதிக்கிறது’ எனத் தெரிவித்தார். மேலும், மோகனகிருஷ்ணன் தரப்பு சாட்சியை விசாரணை செய்யவில்லை என்பதால் மீண்டும் விசாரித்து அறிக்கை தர வேண்டும் என நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார்.