Skip to main content

24 மணி நேரமும் மதுபானங்கள் கிடைக்கும்போது டாஸ்மாக் நேரத்தை மாற்றி அமைப்பதால் என்ன பயன்??? -உயர்நீதிமன்ற மதுரை கிளை

Published on 07/02/2019 | Edited on 07/02/2019

 

 

டாஸ்மாக் நேரத்தை மதியம் 2 மணிமுதல் இரவு 8 மணிவரை மாற்றியமைக்க உத்தரவிடக்கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இவ்வாறு தெரிவித்துள்ளது.

 

வருவாய்க்காக டாஸ்மாக்கை மட்டும் நம்பாமல் வேறு வழிகளில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்துவிட்டது, இனிவரும் தலைமுறையாவது காக்கப்பட வேண்டும். டாஸ்மாக் மற்றும் பார்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தினால் பெரும்பாலான குற்றங்கள் குறையும், அனைத்து ஊர்களிலும் கிராம சபை கூட்டம் நடத்தி டாஸ்மாக் வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றலாமே.

 

24 மணி நேரமும் மதுபானங்கள் கிடைக்கும்போது டாஸ்மாக் நேரத்தை மாற்றி அமைப்பதால் என்ன பயன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 28ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்