/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4200.jpg)
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதலாக நான்கு நீதிபதிகளை நியமித்து இந்தியகுடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாவட்ட நீதிபதி அந்தஸ்த்தில் இருந்த ஆர்.சக்திவேல், பி.தனபால், சி.குமரப்பன் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கடந்த மார்ச் மாதம் கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக அந்த பரிந்துரை மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சகம் நிலுவையில் உள்ள பரிந்துரைகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நீதிபதிகளின் நியமனம் குறித்தான ஒப்புதல்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஆர்.சக்திவேல், பி.தனபால், சி.குமரப்பன் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதனால்சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 64-ஆகஉயர்ந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)