Skip to main content

ராயபுரத்தில் ஆயிரத்தை நெருங்கியது கரோனா பாதிப்பு!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020

 

CHENNAI CORPORATION CORONAVIRUS ZONES


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும், இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 


தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2,240 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 66 பேர் உயிரிழந்தனர். குறிப்பாகச் சென்னையில் கரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் எந்தெந்தப் பகுதியில் எத்தனை பேருக்கு கரோனா என்பதை மண்டலம் வாரியாகப் பட்டியலை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி. 
 

 

CHENNAI CORPORATION CORONAVIRUS ZONES


அதன்படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 971 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோடம்பாக்கம் மண்டலத்தில் 895, திரு.வி.க.நகரில் 699, திருவொற்றியூர் 127, மாதவரம் 85, தண்டையார்பேட்டை 437, அம்பத்தூர் 276, தேனாம்பேட்டை 608, வளசரவாக்கம் 461, அண்ணாநகர் 468, அடையாறு 310, பெருங்குடி 72, சோழிங்கநல்லூரில் 65, ஆலந்தூர் 67, மணலி 75 மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 21 பேர் என மொத்தம் 5,637 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 

இதில் 1,071 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 44 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற 4,501 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அம்மா உணவகங்களை மேம்படுத்த உத்தரவு!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
orders to improve Amma restaurants 

அம்மா உணவகங்கள் மூலம் இட்லி, பொங்கல், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், கருவேப்பிலை சாதம், சப்பாத்தி போன்ற உணவுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி சென்னை மாநகராட்சி சார்பில் குறைந்த விலைக்கு உணவு வழங்குவதால் ஆண்டுக்கு ரூ.140 கோடி செலவாகிறது. இத்தகைய சூழலில்தான் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மா உணவகங்களை புதுப்பொலிவாக்கி, ருசியான புதிய உணவுகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சென்னையில் உள்ள 399 அம்மா உணவகங்களின் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியது. அதன்படி அம்மா உணவகங்கள் அமைந்துள்ள கட்டடங்களை சீரமைக்கவும், பெயிண்டிங் வேலை செய்யவும், பழுதான பிரிஜ், கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட இயந்திரங்களை மாற்றவும் மண்டல அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ருசியான புதிய உணவு வகைகளை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான உத்தரவை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் பிறப்பித்துள்ளார். 

Next Story

நாய்கள் கடித்து படுகாயம் அடைந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை நிறைவு!

Published on 09/05/2024 | Edited on 09/05/2024
Surgery completed for girl who was bitten by dogs

சென்னை நுங்கம்பாக்கம் மாடல் பள்ளி பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் ரகு. இவர் தனது உறவினரின் துக்க நிகழ்வில் கலந்துகொள்ள கடந்த 5 ஆம் தேதி (05.05.2024) மாலை வெளியில் சென்றுள்ளார். அதனால் அவரது மனைவி மோனிஷா பூங்காவின் பாதுகாப்பு பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவருடன் அவரது 5 வயது மகள் சுபஷா என்பவரும் இருந்துள்ளார். இந்தச் சிறுமி பூங்காவில் அன்றைய தினம் இரவு 9 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் இரண்டு வளர்ப்பு நாயை அழைத்துக் கொண்டு பூங்காவிற்கு நடைப்பயிற்சிக்கு வந்துள்ளார்.

அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைப் புகழேந்தியின் 2 வளர்ப்பு நாய்களும் கடித்து குதறியது. இதனால் சிறுமி கதறி அழுததைக் கண்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து நாயை விரட்டிவிட்டு சிறுமியை மீட்டனர். நாய்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மேலும் சிறுமியின் மருத்துவ செலவை புகழேந்தி ஏற்றுக் கொள்வதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

Surgery completed for girl who was bitten by dogs

அதே சமயம் வளர்ப்பு நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் உள்ளிட்ட 3 பேர் மீது 2 பிரிவின் கீழ் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து சிறுமியைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மாநகராட்சி பூங்காவில் 5 வயது சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கிடையே சிறுமியைக் கடித்து குதறிய ராட்வைலர் நாய்களை 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து நாயின் உரிமையாளர் புகழேந்தி இரு நாய்களையும் மதுரையில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் நாய்கள் கடித்து பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு இன்று (09.05.2024) பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிறுமி நலமுடன் இருப்பதாகவும், மே 14 ஆம் தேதி வீடு திரும்ப இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் மருத்துவ செலவிற்கு சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 லட்சம் முன்பணம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.