Published on 19/01/2022 | Edited on 19/01/2022

பொங்கல் பண்டிகையையொட்டி, கோவை மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் ரூ.59.65 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மூலமாக 5,410 மதுக்கடைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு தினமும் ரூ.100 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. தீபாவளி, ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நாட்களில் மது விற்பனை அதிக அளவு காணப்படும். அந்த வகையில், பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் 3 நாள்களில் ரூ.675.19 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
கோவை மாவட்ட டாஸ்மாக் கீழ் 274 மதுக்கடைகள் செயல்படுகின்றன. இதில், பொங்கல் தினமான 14ஆம் தேதி ரூ.59.65 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.