Published on 20/02/2019 | Edited on 20/02/2019
தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.செல்லப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

61.4 சதவீதம் டாஸ்மாக் பிரியர்களின் சார்பாக அதிகார பூர்வமான அறிவிப்பு. வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணியில் சேரும் எந்த கட்சியுடனும் தமிழ்நாடு மதுகுப்போர் விழிப்புணர்வு சங்கம் சேராது. ஆதரிக்காது. 61.4 சதவீதம் டாஸ்மாக் பிரியர்களின் குடும்பங்களின் நலனை காக்கும் கட்சிகளோடு மட்டுமே கூட்டணி சேரும். இல்லையேல் தனித்தே தேர்தலை சந்திக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.