சமூக வலைத்தளங்களில் லைக்குகளை பெறவும் ஃபேன் பாலோயிசை அதிகரித்துக்கொள்ளவும் டிக் டாக்கில் அபாயகரமான முயற்சியில் இறங்கி ஆபத்தைத்தேடிக்கொள்வது தொடர்கதையாகிவருகிறது.
சமீபத்தில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்த இளைஞர்கள் அரிவாளோடு டிக்டாக் செய்து ஐந்து வழக்குகளில் சிச்கொண்டனர். அதே போல் விஷம் அருந்துவது போலும், தூக்கில் தொங்குவது போலும், அந்தரத்தில் பல்டி அடிப்பது போலவும் டிக் டாக் செய்து விபத்தில் சிக்கி கொள்வதோடு உயிரையும் மாய்ச்சிக்கொள்கின்றனர். மரத்தில் இருந்து பல்டி அடிப்பது போல முயற்சித்து கழுத்தை முறித்துக்கொண்டு உயிரை விட்ட சம்பமும் நடந்துள்ளது.
அந்த வகையில் நாகப்பட்டினம் நண்பர்கள் என்கிற குழுவில் ஒரு வீடியோ ஒன்றும் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் மீனவர்கள் நட்ட நடுக்கடலில் ஆபத்தான முறையில் ஆடல் பாடல் என கொண்டாடுவது போல் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவு மீனவர்களை மட்டுமின்றி சமுக ஆர்வளர்கள் மத்தியிலும் பேசப்படும் செய்தியாக தற்போது மாறியிருக்கிறது.
கெடுதலை விளைவிக்கும் டிக் டாக் போன்ற செயலிகளை தடை செய்ய வேண்டும் என பொது நல வழக்கு போடப்பட்டது. ஆனால் டிக்டாக் ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்கினங்க இதற்கான தடையை நீக்கியது நீதிமன்றம். தற்போது மீண்டும் வேறு விதமாக எந்தவித அச்சமும் இல்லாமல் தற்போது செயல்படுகிறது. அதனால் குடும்பத் தகராறுகளும், விபத்துக்களும், வன்முறைகளும் பெருகி வருகின்றன என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்.
அதே நேரத்தில் "தனித்திறனை வளர்த்தெடுக்கவும், பொதுவெளியில் பாராட்டைப் பெறவும், சின்னத்திரை, பெரியதிரை, உள்ளிட்டவற்றில் அடியெடுத்து வைக்கவும், இது வசதியாக இருக்கிறது, இதை ஏன் பொழுதுபோக்கு சாதனமாகவும், மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தாகவும் நினைக்காமல் வன்முறையாக நினைக்கிறீர்கள்," என்கிறார்கள் அதன் ஆதரவாளர்கள்.
இந்த சூழலில் கடலில் எந்த சமயத்தில் என்ன ஆபத்து இருக்கும் என்பதை உணர்ந்த மீனவ இளைஞர்களும் கூட ஆபத்தான ஒரு விளையாட்டை விளையாடி இருப்பது அந்த வீடியோவை பார்ப்பவர்கள் மனதை பதைபதைக்க வைக்கிறது. அவர்கள் ஆடியதும் பாடியதும் பார்ப்பவர்களை சந்தோஷமாக்கியிருக்கலாம், ஆனால் அதன் விபரீதம் என்பது விடியோவைப் பார்த்தாலே புரியும்.