Skip to main content

பெண்ணை அறைந்த தீட்சிதருக்கு உதவும் அமைச்சர்... பரபரப்பை கிளப்பிய தீட்சிதர்! 

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி கும்பிடச் சென்ற லதா என்பவரைத் தாக்கியதோடு, அவர்மீது அவதூறு பரப்பி பரபரப்பு கிளப்பினார் தீட்சிதர் தர்ஷன். தர்ஷன்மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதற்குள் கோவிலுக்கு கட்டளைதாரர்களாக இருப்பவர்களின் உதவியுடன், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தயவில் அவர் தலைமறைவாகி விட்டார். காவல்துறையின் தேடுதல் வேட்டையிலும் முன்னேற்றமில்லை. 
 

incident



இதுபற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ""தர்ஷன் கைதாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் தீட்சிதர்கள், அதற்கான எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். செந்தில்நாதன், அன்பரசன், சுந்தரமூர்த்தி ஆகிய மூன்று வழக் கறிஞர்களில் ஒருவர் சார்பில் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத் தை நாடியதாக தெரிகிறது. ஆனால், வழக்குப் பிரிவுகளைத் தவறாக பதிவு செய்ததால், அவர்களே மனுவை வாபஸ் வாங்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்'' என்கிறார்கள். இதற்கிடையே சிதம்பரத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த அமைச்சர் சம்பத்திடமும் தர்ஷன் கைதாவதை தடுக்குமாறு முறையிட்டு, க்ரீன் சிக்னல் வாங்கியதாக தகவல் கசிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்