
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் (சி.பி.ஐ) கட்சியினர் ரயில்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டப்போது காவலர்களுக்கும் அவர்களுக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதனிடையே ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு ஏதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து காவல் துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை மீறி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற ஆர்ப்பாட்டகாரர்களுக்கும், காவல் துறையினருக்குமிடையே ஆர்ப்பாட்டம், தள்ளு முள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ரயில் நிலையம் முற்றுகை போராட்டதினால் கோவை ரயில் பயணிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.