Skip to main content

காவிரி விவகாரம்: திருச்சியில் கே.என்.நேரு தலைமையில் தபால்நிலையம் முற்றுகை!

Published on 05/04/2018 | Edited on 05/04/2018
trichy


காவிரி மேலாண்மை அமைக்க கோரி திருச்சியில் இன்று காலையில் கே.என்.நேரு தலைமையில் திருச்சி தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம் அறிவிப்பு கொடுத்திருந்தார்.

கே.என்.நேரு தலைமையில் காலை முதலே தொண்டர்கள் தபால் நிலையம் அருகே குவிய துவங்கினர். முற்றுகை போராட்டத்தை தடுப்பதற்காக போலிசார் தயார் நிலையில் இருந்தனர். காங்கிரஸ் பொறுப்பாளர் கலை, கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த ஸ்ரீதர், செல்வராஜ், வெற்றிச்செல்வன், சுரேஷ்.. விடுதலை சிறுத்தைகள் கட்சி அருள், உள்ளிட்டோர் குவிய ஆரம்பித்தனர். தீடீர் என தலைமை தபால் நிலையம் அருகே இரண்டு சாலைகளை மறித்து தொண்டர்களை அழைத்து சென்று மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் போட்டுக்கொண்டே இருந்தனர்.
 

 trichy2


அப்போது தி.மு.க.வை சேர்ந்த மகளிர் அணியினர் விஜயஜெயராஜ் மற்றும் லீலா ஆகியோர் தலைமையில் ஒரு குரூப் போலீஸ் பாதுகாப்பு வலையத்தை மீறி உள்ளே செல்ல முயற்சி செய்தனர். அப்போது அங்கே பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த ஏசி மகளிர் அணியினர் உள்ளே நுழைகிறார்கள் ஏதாவது ஏடாகுடமா ஆகி விட போகிறது என்று பெண் போலீசார்களை கொண்டு வந்து நிறுத்தி நிலைமையை சமாளித்தனர்.
 

trichy 3


மக்கள் அதிகாரம் அமைப்பினர் அனைத்து கட்சியினர் போராட்டத்தோடு இணைந்து கொண்டு திருச்சி மேலப்புதூரிலிருந்து தலைமை தபால் நிலையம் வரை ஊர்வலமா வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதற்கு இடையில் ஆர்ப்பாட்டத்திற்கு வந்து கொண்டிருந்தவர்கள். தபால்நிலையம் அருகே உள்ள ரவுண்டானா முழுவதையும் அடைத்து மறித்து அந்த பக்கம் வந்த பேருந்துகளை எல்லாம் மறித்து கொடிகளுடன் மேலேயே ஏறி கோஷம் போட ஆரம்பித்தனர். போலீசாருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கினார்கள். போக்குவரத்து மாநகருக்குள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.. இதே போல ஸ்ரீரங்கம் பகுதியில் காங்கிரஸ் – மற்றும் தி.மு.க.வினர் ரயிலை மறித்து கைதானார்கள்.

சார்ந்த செய்திகள்