Skip to main content

கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற அரசு ஆணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு!- கோரிக்கைகளை முன்வைக்கும் தனியார் பள்ளிகள் சங்கம்!

Published on 04/07/2020 | Edited on 04/07/2020
Case for cancellatiCase for cancellation of government order not to impose education bill - Private Schools Associationon of government order not to impose education bill - Private Schools Association

 

 

தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற தமிழக அரசு ஆணையினை ரத்து செய்ய வேண்டுமென,  அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் கே பழனியப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,  தமிழக அரசிடம் பதில் மனு தாக்கல் செய்யச் சொன்னது. அதனைத்தொடர்ந்து, இரண்டாம் கட்ட வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல், வழக்கில் ஆஜராகி,  வாதத்தை எடுத்து வைத்தார்.  மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் மற்றும் விஜய் ஆனந்த் ஆகியோர், தங்களது வாதத்தை முன்வைத்தனர்.  இருதரப்பையும் விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரரிடம் கோரிக்கை மனுவைப் பெற்று,  நன்கு ஆராய்ந்து நல்ல முடிவு எடுக்க வேண்டும் எனவும்,  வரும் 8-ஆம் தேதி, வழக்கை விசாரிப்பதாகவும் தெரிவித்தது.  அதனடிப்படையில்,  அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் சார்பில்,  தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் பின்வருமாறு,

“கடந்த 2019- 20 கல்வி ஆண்டில், மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டண பாக்கியை வசூலித்துக் கொள்வதற்கு எவ்வித தடையும் விதிக்கக்கூடாது. 2020 -21 ஆம் ஆண்டு கல்விக் கட்டணத்தை, மூன்று தவணைகளில் வசூலித்துக் கொள்ள உத்தரவிட வேண்டும். மேலும், இரண்டு கல்வி ஆண்டுகளாக, கல்லூரிகளுக்கு வழங்கப்படாமல் உள்ள எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் நிலுவைத் தொகையை, உடனடியாக வழங்க வேண்டும். மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகளுக்கு RTE மூலமாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் கல்விக் கட்டணத்தை,  2018 -19 கல்வி ஆண்டுகளில் 40% வழங்கப்படாமல் உள்ளதையும்,  கடந்த கல்வி ஆண்டு முழுமையாக வழங்கப்படாமல் உள்ளதையும், உடனடியாக வழங்க வேண்டும்.  இக்கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் நிறைவு பெற்றவுடன், கால தாமதப்படுத்தாமல் ஸ்காலர்ஷிப் கட்டணம் மற்றும் RTE கட்டணங்களை தாமதமில்லாமல் வழங்க வேண்டும்” என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்