
கோவை எம்.எல்.ஏ.வும், கொங்கு இளைஞர் பேரவையின் தலைவருமான தனியரசு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது,
ஜெயலலிதாவின் நல்லாட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தந்து வருவதை, முதல்வரின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சியால் அளிக்கப்பட்ட பொய் புகாரில் முகாந்திரம் இல்லையென லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தும், சிபிஐ விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது என்றவர், தமிழகத்திலும் , மற்ற மாநிலங்களிலும் இவ்வளவு எளிதாக முதல்வர் மீதான ஊழல் புகாரை விரைவாக சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதில்லை என்றார்.
தீரத்துடன், நேர்மையாக இந்த வழக்கை சந்தித்து முதல்வர் வழக்கிலிருந்து விடுதலையாவர் என்றும், முதல்வருக்கு இது பின்னடைவு இல்லை என்றவர், நட்சத்திர அந்தஸ்தை பெறக்கூடிய வழக்காக முதல்வர் இதை பார்க்க வேண்டும் என்றும், முதல்வர் தரப்பில் கடுமையாக வாதாடி நீதிமன்றத்திற்கு முறையான ஆவணங்களை வழங்கியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மத்திய அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட ஸ்பெக்ட்ரம் வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி விடுதலையானது போல், முதல்வர் மீதும் உண்மைக்கு மாறாக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட இந்த வழக்கிலிருந்து விடுதலையாவர் என்றார்.