பிராமண குல துரோகி கமல்ஹாசன் என நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், “பூணூல் “ அதனாலேயே அதை தவிர்த்தேன். https://t.co/9YKk6wji5c
— Kamal Haasan (@ikamalhaasan) June 30, 2018
முன்னாதாக, நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அதில் ரசிகர் ஒருவர், நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது கமல்ஹாசன் ஐயா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், “பூணூல் “ அதனாலேயே அதை தவிர்த்தேன் என குறிப்பிட்டு பதில் அளித்தார். கமல்ஹாசனின் பதில் பிரமாண மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கமலின் கருத்துக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், டிவிட்டர் கேள்வி பதிலில் பூணூலை பற்றி கீழ்தரமாக விமர்சித்த பிராமண குல துரோகி கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறோம் என கூறப்பட்டுள்ளது.