புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவர் சுவாமிநாதன் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- கேரளாவின் மிட்டாய் விஜயன் அரசு சபரிமலைக்கு செல்லும் பக்தர்களை தவறாக கைது செய்து வருகின்றார்கள். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாக திரும்ப முடியுமா என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.
சபரிமலை மீதும், கலாச்சாரத்தின் மீதும் நம்பிக்கை உள்ள பெண்கள் இதுவரை கோவில் செல்லவில்லை. சபரிமலை புனிதத்தை சீர்குலைக்க வேண்டுமென்றே கம்யூனிஸ்ட் அரசு செயல்படுகின்றது. இந்து மதத்தை எதிர்ப்பவர்களை கொண்டு சபரிமலையின் புனிதத்தை கெடுக்கின்றது.
பக்தர்களுக்கு பாதுகாப்பு கருதியும், சபரிமலையில் இருக்கும் போலீசாரை அகற்ற வலியுறுத்தியும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வரும் 26ம் தேதி முழு வேலை நிறுத்தப் போராட்டம் ( பந்த்) நடைபெறும். இதற்கு ஐய்யப்ப பக்தர்கள், வணிகர்கள், பேருந்து ஓட்டுநர்கள் ஆதரவளித்து முழு அடைப்பில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.