Skip to main content

தேசியக்கொடியை அவமரியாதை செய்ததாக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மீது வழக்கு!

Published on 28/10/2020 | Edited on 28/10/2020
BJP alleges insult to national flag Case against Chairman L. Murugan

 

சுதந்திர தினத்தன்று தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில்,  மாநிலத் தலைவர் எல்.முருகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சிக் கொடி ஏற்றக்கூடிய கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி அவமரியாதை செய்ததாக,  பாஜக தலைவர் எல்.முருகன், வானதி சீனிவாசன் மற்றும் இல.கணேசன் ஆகியோருக்கு எதிராக,  முகப்பேரைச் சேர்ந்த குகேஷ் என்பவர்,  அண்ணா நகர் காவல் நிலையத்தில் கடந்த 17-ம் தேதி புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால்,  வழக்கு பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், குகேஷ்  மனு தாக்கல் செய்துள்ளார். அதில், பாஜக கட்சி கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றியது, தேசியக் கொடி விதிகள் மற்றும் தேசிய சின்னங்கள் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின்படி குற்றம் என்பதால்,எல்.முருகன்,  இல.கணேசன், வானதி சீனிவாசனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என,  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதுஇந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்