Skip to main content

கோடிக்கணக்கில் செலவு செய்த கண்மாய்கள் உடைப்பு!

Published on 01/10/2018 | Edited on 01/10/2018

 

man

 

திண்டுக்கல் மாவட்டத்தில் கோடிக்கணக்கில் செலவு செய்து  சீர் அமைக்கப்பட்ட கண்மாய்கள் சில மாதங்களிலேயே உடைந்தது. 


      
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் இருக்கும் போது பணித்துறை சார்பில் நீர்வளம் மற்றும் நிலவளத்திட்டத்தின் கீழ் நான்கு கோடி மதிப்பீட்டில் அப்பகுதிகளில் உள்ள கொங்கர்குளம்மற்றும் சிலுக்குவார்பட்டி, கீழ்குளம், பாப்பன் குளம்   ஆகிய கண்மாயிகள் சீர் அமைக்கப்பட்டு பணிகள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் நடைபெற்றது. இத் திட்டத்தின் கீழ் கண்மாய் கரைகள் பலபடுத்துதல், மடைகள் சீர் அமைப்பு, தூர் வாருதல் போன்ற பணிகள் முக்கியமானவை என்பதால் பொதுப்பணித்துறையின் மேற் பார்வையில் புதுக்கோட்டையை சேர்ந்த காண்ட்ராக்ட்டர் பாலு தலைமையில் பணிகள் செய்தனர்.


        இந்த நிலையில் தான் கடந்த  ஒருவாரமாகவே விட்டு விட்டு பெய்து வரும்  சிறு மழைக்கே கண்மாய்கரை படகுகளில் உள்ள சில இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு கண்மாய் உடைந்து விட்டது.


     இதை கண்டு   அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த  சில விவசாயிகள் பொதுப்பணித்துறையின் காதுக்கு கொண்டு போனபோது...இது எங்கள் பணி இல்லை மதுரை பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தெரிவியுங்கள் என கூறி கையை விரித்து விட்டனர்.  அதை தொடர்ந்து விவசாயிகளும் மதுரையில் உள்ள பொதுப்பணித்துறையினருக்கு தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.  இந்த நிலையில் நேற்று  அப்பகுதியில் 12 செ.மீட்டர் மழை பெய்ததின் மூலம்  அப்பகுதியில் இருந்து கண்மாயிகளுக்கு தண்ணீர் வரத்து வந்தும் கூட அங்கங்கே கரைகள் அரிப்பு ஏற்பட்டு உடைந்து  இருப்பதால் தண்ணீரும் வீணாகி விட்டது.   இந்த நிலை தொடர்ந்து நீடித்தால்  வரக்கூடிய பெரும்  மழைக்காலங்களில் கண்மாயிகளில் பெரும் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் வந்து விடும் அதற்குள் அதிகாரிகள் கரையை சீர் அமைக்க முன் வர வேண்டும்.


  

சார்ந்த செய்திகள்