Published on 13/02/2019 | Edited on 13/02/2019

ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ இறந்தால் அவருக்கு பதிலாக அக்கட்சியை சேர்ந்த நபரையே எம்.எல்.ஏவாக தேர்வு செய்யலாம் என உயர்நீதிமன்ற மதுரைகிளை கருத்து தெரிவித்துள்ளது.
திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில் இடைத்தேர்தல் நடத்தாமலே எம்.எல்.ஏவை தேர்வு செய்வதால் மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுவது தடுக்கப்படும் என கூறிய நீதிமன்றம் அதற்காக ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ இறந்தால் அவருக்கு பதிலாக அக்கட்சியை சேர்ந்த நபரையே எம்.எல்.ஏவாக தேர்வு செய்யலாம் என கருத்து தெரிவித்தது.