Published on 16/12/2024 | Edited on 16/12/2024
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடிகர் சரத்குமார் பங்கேற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழா மேடையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சரத்குமார் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அப்போது, சிலர் தமிழக வெற்றி கழகம் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களை 200 ரூபாய் கொடுப்பதாக கூறி அழைத்து வந்ததாகவும் ஒரு ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், “தங்களுக்கு காசு கொடுக்கிறோம் என்று தான் அழைத்து வந்தார்கள். கட்சியில் இணைவது பற்றி எங்களுக்குத் தெரியாது. நான் விஜய் கட்சியில் தான் இருக்கிறேன்” என இளைஞர் ஒருவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.