Skip to main content

ஜெ. மரணம் தொடர்பான விசாரணை... மீண்டும் ஆறுமுகசாமி ஆணையம்!

Published on 07/03/2022 | Edited on 07/03/2022

 

Arumugasami Commission to resume inquiry after 2 years!

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் இது தொடர்பாக  விசாரணை நடத்தி வருகிறது. பலமுறை இந்த ஆணையத்தை காலநீட்டிப்பு செய்தது தமிழக அரசு.  இந்த விசாரணை ஆணையத்தில் பல்வேறு தரப்பினர் நேரடியாக ஆஜராகி விளக்கங்கள் கொடுத்த நிலையில் பலமுறை ஆணையத்தின் காலம் நீட்டிப்பு செய்யப்பட்டாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை எதுவும் நடைபெறாமல் இருந்தது.

 

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளது.சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அப்போலோ மருத்துவர்கள் 11 பேர் இன்று குறுக்கு விசாரணைக்கு ஆஜராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போலோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர பாண்டியன் குறுக்கு விசாரணை செய்ய இருக்கிறார்.இந்த விசாரணையின் பொழுது எய்ம்ஸ் பரிந்துரைத்த மருத்துவர் குழுவும் காணொளியில் வாயிலாகப் பங்கேற்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்