வருகிற 19ஆம் தேதி தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் நான்கு தொகுதிகளில் நடைபெற உள்ளது. அதில் ஒன்று ஒட்டப்பிடாரம். இந்த தொகுதியில் அதிமுகவின் வேட்பாளராக மோகன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதியில் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அவர் மக்களிடம் பேசும்போது , அம்மாவின் ஆட்சி நீடிக்க வேண்டுமென்றால் நீங்கள் அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று வேண்டிக்கொண்டார். இதற்கிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 65 வயது முடிந்து 66 வயது. நேற்று பிறந்த தினம். இதை அங்கு உள்ள அதிமுக நிர்வாகிகள் கொண்டாட முடிவு செய்தனர்.
பிரச்சாரத்தில் இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு கேக்கை கொண்டுவந்து அதிமுக நிர்வாகிகள் கொடுக்க, எடப்பாடி பழனிச்சாமி அங்கு இருந்த பெண்களை அழைத்து கேக் வெட்டி பெண்களுக்கும் கொடுத்து, இன்று எனக்கு பிறந்தநாள் என்பதோடு அன்னையர் தினம் என்பதால் உங்களுக்கும் கேக் கொடுக்கிறேன் என கேக்கை கொடுத்தார்.